Monday, June 13, 2016

வணக்கம்,

சென்ற பதிவில்
பஞ்சபூதங்களான
மண் 1 ஆம் எண்ணையும்
நீர் 2 ஆம் எண்ணையும்
தீ 3 ஆம் எண்ணையும்
காற்று 4 ஆம் எண்ணையும்
ஆகாயம் 5 ஆம் எண்ணையும்
 ஆதிக்கமாக கொண்ண்டுள்ளது என கண்டோம்

நினைவில் கொள்ளுங்கள்

1 ---- மண்
2. ---- நீர்
3.----- தீ
4 ------ காற்று
5. ------- ஆகாயம்

சரி . பங்குசந்தைக்கும்  பஞ்சபூதங்களுக்கும் எப்படி தொடர்பு ஏற்பட்டுள்ளது
என பார்ப்போம்.

பங்கு சந்தை என்பதே அதில் பட்டியலிடப்பட்ட பங்குகளின் விலை அல்லவா

ஆகவே இந்த விலையினைத்தான் நாம் பஞ்சபூதங்களோடு ஒப்பிட்டு பார்க்க போகிறோம்.
அதற்கு முன் பின்வரும் அட்டவணையை பாருங்கள்


மண்
1
6
11
16
21
26
31
36
41
46
நீர்
2
7
12
17
22
27
32
37
42
47
தீ
3
8
13
18
23
28
33
38
43
48
காற்று
4
9
14
19
24
29
34
39
44
49
ஆகாயம்
5
10
15
20
25
30
35
40
45
50

மண்
51
56
61
66
71
76
81
86
91
96
நீர்
52
57
62
67
72
77
82
87
92
97
தீ
53
58
63
68
73
78
83
88
93
98
காற்று
54
59
64
69
74
79
84
89
94
99
ஆகாயம்
55
60
65
70
75
80
85
90
95
100


என்று தொடர்ந்து கொண்டே இருக்கும்.

அதாவது  5 ஆம் எண்ணிற்கு பிறகு வரும் எண்ணை  பஞ்சபூதங்களுக்குள் எப்படி அமைப்பது 

அந்த எண்ணை 5 ஆல் வகுக்க வரும் மீதியே  ஆகும்

உதாராணமாக   12 / 5  =  மீதி    2 

                                   58 /5 =  மீதி    3 

ஆக மேற்கண்ட அட்டவணை படி எண்களானது பஞ்சபூதங்களின் ஆதிக்கத்தில் தொடர்ந்து வரும்.


பங்குகளின் விலையினை பஞ்சபூதங்களின் எண்ணுடன் ஒப்பிட்டு கொள்ள வேண்டும் 

சரி .பிறகு பங்குகளின் விலையினை பார்போம்


**********************

தேசிய பங்கு சந்தை யான நிப்டி(NIFTY) குறியீட்டு எண்ணை ஒரு உதாராணமாக கொண்டு காணாலாம் 

தற்போது நிப்டி 81௦௦  என்ற விலைகுறியிட்டில் வர்த்கமாகி கொண்டுள்ளது.

சென்ற மாதம் 7800 என்ற நிலையில் வர்த்தகமாகியது 

இந்த 7800 என்பது   3 ஆம் பஞ்சபூதமாகிய   தீ யை  குறிக்கும்.

ஆக 7800 ஐ தாண்டி நிப்டி வர்ததகமானால் தீ பற்றிக்கொண்டு எரிவதை போல வர்த்தகமாகும் .

சரி தீ பற்றினால் என்னவாகும் .காற்று அதை வேக படுத்தி  மேலே (ஆகாயம்) கொண்டு செல்லும் 
.
அதாவது 7800 தாண்டினால் 7900 ,8000 என செல்லும்.

சரி ,தீ எப்போது அடங்கும்? தீ ஆனது மண் அல்லது  நீர்  இல்    அணையும் .

ஆக 7800 தாண்டி 7900 8000 என தாண்டி சென்றால் 8100 (மண்) 8200(நீர்) எனற இடத்தில் தான் அடங்கும் .

கீழ்கண்ட நிப்டி கடந்த 2 மாதகால சார்ட்டை கவனியுங்கள்  


  
மேற்கண்ட  நிப்டி சார்ட்டில் எப்பொழுது எல்லாம் 7800 ஐ கடக்கிறதோ வேகமேடுப்பதை காணலாம்.


சரி .இன்று இது போதும்.

இனி வரும் பதிவுகளில் மேலும்  சற்று விளக்கமாகக் காணலாம் 

உங்கள் 
பார்த்திபன்














Wednesday, June 1, 2016

வணக்கம்.
சென்ற பதிவில் பஞ்சபூதங்களான  மண், நீர், தீ, காற்று ,ஆகாயம் ஆகியவற்றை பார்த்தோம்.இன்றைய பதிவில் ஒரு நாளில் இந்த பஞ்சபூதங்கள் எவ்வாறு ஆள்கின்றன என்பது பற்றி பார்ப்போம்.
                     ஒரு நாள் என்பது 24 மணி நேரம் ஆகும்.பகல் 12 மணி நேரம் ,இரவு 12 மணி நேரம். ஒரு நாள்  என்பது தமிழ் முறைப்படி  60 நாழிகைகள்  கொண்டது.
அதாவது பகல் 30 நாழிகைகள்  ,இரவு 30 நாழிகைகள் . 
                              ஒரு நாள் = 24 மணி நேரம் = 60 நாழிகைகள்  

ஒரு நாளைக்கு 24 மணிநேரம் என்பது 1440 நிமிடங்கள்   ஆகும்.(24 x 60=1440).
நாழிகையில் சொல்ல வேண்டுமென்றால் 60 நாழிகைகள்.
அதாவது ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள் (1440/60=24)
 
பகல் 30 நாழிகைகளை பஞ்சபூதங்கள் எவ்வாறு ஆள்கின்றன என்றால்  

30 நாழிகைகளையும்  5 ஆல் வகுக்க  ஒரு பூதத்தின் ஆட்சி  என்பது 6 நாழிகைகள் ஆகும். அதாவது 144 நிமிடங்கள் (24x6=144).அதாவது 2 மணி 24 நிமிடங்கள் 

என்ன குழம்புகிறதா? 
பகல் 12 மணி நேரத்தை பஞ்சபூதங்களும் ஒவ்வொரு 2  மணி 24 நிமிடங்களுக்கும்  ஆள்கின்றன.
சரி .
இன்றைய நாளில் இந்த மணி நேரத்தில் எந்த பூதம் ஆட்சி செய்கிறது என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது என்று பார்ப்போம்.
இதற்கு ,நாம் அன்றைய நாளின் சூரியோதயம்  எப்போது என்று தெரிந்து கொள்ள வேண்டும் .
அதாவது சூரியோதயத்திலிருந்து ஒவ்வொரு 2 மணி 24 நிமிடங்களுக்கும் பஞ்சபூதங்களின் ஆட்சி தொடர்ந்து நடை பெற்று கொண்டே இருக்கும் .
பகல் 30 நாழிகைகள்  முடிந்ததும் இரவு 30 நாழிகைகள் தொடர்ந்து பஞ்சபூதங்களின் ஆட்சி நடை பெறும் .
  
உதாரணமாக 1/6/2016 புதன்கிழமை சூரியோதயம் 5.45 am 


புதன் ,கேது என்ற கிரகங்கள் காற்று என்ற பஞ்சபூதத்தில் அடங்கும் 

ஆகவே அன்றைய நாளானது காற்று என்ற பஞ்சபூதத்திலிருந்து தொடங்குகிறது.
காற்றை அடுத்து  ஆகாயம் , மண் , நீர் ,தீ என்று பஞ்சபூதங்களின் ஆட்சி தொடர்கிறது .
சூரியோதயத்திலிருந்து கணக்கிட்டால் 

காற்று ----  5.45 முதல் 8.09 வரை 
ஆகாயம்---- 8.10  முதல் 10.33 வரை
மண் -----  10.34 முதல் 12.57 வரை 
நீர் ------ 12.58 முதல் 3.21 வரை 
தீ ----- 3.22 முதல் 5.45 வரை 

என்று ஒவ்வொரு 2 மணி 24 நிமிடங்களும் பஞ்சபூதங்களின் ஆட்சி நடைபெறும்.

அன்றைய தினத்தை பொறுத்து சூரியோதயத்திலிருந்து பஞ்சபூதங்கள் மாறுபடும்.

திங்கள்கிழமை/ வெள்ளிக்கிழமை  --------  நீர் (சந்திரன்,சுக்கிரன்)
செவ்வாய்கிழமை ----- தீ   (செவ்வாய்,சூரியன்,கேது)
புதன்கிழமை ------ காற்று (புதன்)
வியாழக்கிழமை------ மண் (குரு)
சனிக்கிழமை ----- ஆகாயம் (சனி, ராகு )

சரி  நணபர்களே மேற்கண்டவற்றை நினைவில் கொள்ளுங்கள்
அடுத்த பதிவில் சந்திப்போம்



.

Saturday, May 28, 2016

பஞ்சபூதங்கள்

வணக்கம்,
        இது என்ன வித்தியாசமான  தலைப்பாக உள்ளதே என்று யோசனை எழுகிறதா நண்பர்களே. சில கால ஆராய்ச்சிக்கு பின் இந்த கட்டுரை யை ஆண்டவன் ஆசியுடன் எழுதுகிறேன் ,


 பஞ்சபூதங்கள் என்பன யாவை ? 
நீர், நிலம் , காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய ஐந்து அம்சங்களே பஞ்ச பூதங்கள் எனப்படுகின்றன.



 நிலம் 
நீர்
நெருப்பு
காற்று.
ஆகாயம்
என்ற  வரிசை முறையிலேயே பஞ்சபூதங்கள் இந்த உலகை ஆள்கின்றன.
.
நம் உடலே கூட மேற்கண்ட வரிசையிலேயே அமைந்துள்ளது
நிலம்---- கால் முட்டி முதல் பாதம் வரை 
நீர் ---  இடுப்பு முதல் கால் முட்டி வரை 
நெருப்பு ---- இடுப்பு முதல் வயிறு வரை 
காற்று ----  வயிறு முதல் மூச்சு குழல் வரை 
ஆகாயம் --- மூச்சு குழல் முதல் உச்சி வரை

சரி.
நாம்மேற்கண்ட வரிசையிலேயே 
மண் 
நீர் 
தீ
காற்று 
ஆகாயம்
 என்று அழைப்போம் 
பஞ்சபூதங்களும் நவகிரகங்களின் ஆதிக்ககத்தில் அடங்கும்

மண் ---- குரு                   
நீர் ---  சந்திரன், சுக்ரன்    
தீ ---  சூரியன், செவ்வாய் 
காற்று---- புதன் , கேது
ஆகாயம் --- சனி , ராகு

என்று ஒவ்வொரு பூதங்களும்  மேற்கண்ட கிரகங்களின் ஆதிக்கத்தில் உள்ளன.

ஆகவே  பஞ்சபூதங்கள் மேற்கண்டகிரகங்களின் ஆதிக்க எண்ணை பெற்றுள்ளது.

மண் 1 ஆம் எண்ணையும் 
நீர் 2 ஆம் எண்ணையும்
தீ  3 ஆம் எண்ணையும்
காற்று 4 ஆம் எண்ணையும்
ஆகாயம். 5 ஆம் எண்ணையும் ஆதிக்கமாக கொண்டுள்ளது.

நினைவில் கொள்ளுங்கள் 

1. மண்
2  நீர் 
3 தீ
4 காற்று
5.ஆகாயம்



சரி. இன்று இது போதும் . இனிவரும் பதிவுகளில் சந்திப்போம்